×

நாமக்கல் மாவட்டத்தில் 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம்

நாமக்கல், நவ.30: நாமக்கல் மாவட்டத்தில் 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு 1,000 நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் பயனாளிகள், அவர்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறலாம். ஒரு கோழி குஞ்சு 30 வீதம் 1,000 கோழிக்குஞ்சுகளுக்கான கொள்முதல் தொகை 30 ஆயிரம் ஆகும். இதில், 50 சதவீத மானியமாக 15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதேபோல், தீவனம் கொள்முதல் செய்ய மானியமாக 22,500-ம், குஞ்சு பொரிப்பான் ஒன்றுக்கான கொள்முதல் தொகை 75 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக 37500 வழங்கப்படுகிறது. பயனாளி கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். 1,000 கோழிகளுக்கு இருப்பிட வசதி இருக்க வேண்டும். 2,500 சதுர அடி நிலம் ஒரே இடத்தில் உள்ளவராக இருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கிராம ஊராட்சியில் பயனாளி நிரந்தர குடியிருப்பு உள்ளவராக இருக்க வேண்டும். கணவனை இழந்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். குறைந்தபட்சம் 3 ஆண்டுக்கு கோழிப்பண்ணையை வெற்றிகரமாக நடத்துபவராக இருக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் குறுகிய கால பயிற்சி திட்டம்திருச்செங்கோடு, நவ.30: திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணுவியல் துறையும் ஏஐசிடிஇயும் இணைந்து இரண்டாம் சுற்று செயற்கை  நுண்ணறிவு அடிப்படையிலான நாவல் மின் வினியோகம் மற்றும் திருத்தம் குறித்து 6 நாட்கள் ஆன்லைன் குறுகிய கால பயிற்சி திட்டம்  கூகுள் மீட் பயன்பாட்டில்  நடந்தது.
கல்லூரியின் தாளாளரும், செயலாளருமான பேராசிரியர் பாலதண்டபாணி துவங்கி வைத்தார்.

செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் முதல்வர்   வெங்கடேஷ், முதன்மை நிர்வாக அதிகாரி  மதன்  மற்றும் வேலைவாய்ப்பு -பயிற்சி துறை இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோர்  கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சோமசுந்தரம், வினய்குமார், வெங்கட கிருத்திகா, ரஞ்சித்  தங்கவேல் மற்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். செங்குந்தர் பொறியியல் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் உமாதேவி  நன்றி  கூறினார். ...

Tags : Namakkal district ,
× RELATED கரூரில் கொல்லிமலை செட் மளிகை பொருட்கள் விற்பனை அமோகம்