- கோட்டம்
- தாலுக்கா
- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- சென்னை
- பெருங்குடி
- ஒக்கியம் மடுவு
- சோளிங்கநல்லூர்
- பல்லிகாரனை
- நெடுஞ்சாலைகள் துறை
- பெருங்குடி...
சென்னை: வடகிழக்குப் பருவமழை காரணமாக, சென்னை ஓ.எம்.ஆர் சாலையான பெருங்குடி, ஒக்கியம் மடுவு, சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட சாலைகள், மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு
நேற்று ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில், பெருங்குடி பகுதியில் முதல் கட்டமாக 10 கோட்ட பொறியாளர்களுக்கு வாக்கி டாக்கிகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சி பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 613 கி.மீ. நீளச் சாலைகள் பராமரிக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 423 கி.மீ. நீளமுடைய மழைநீர் வடிகால், 18,000 சில்ட் கேட்ச் பிட், 752 சிறுபாலங்கள், 39 சிறிய பாலங்கள், 20 பெரிய பாலங்கள் ஆகியவையும் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 7 வாகன சுரங்கப்பாதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மழைநீரை வெளியேற்ற தயார் நிலையில், அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி இயந்திரங்களும், மின் மற்றும் டீசல் பம்புசெட்களும், ஜெனரேட்டர்களும் தயார் நிலையில் உள்ளன. 34 வெள்ள ரோந்து குழுக்கள் 24/7 நேரம் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். 500 சிறப்பு சாலைப் பணியாளர்கள் வெள்ளப் பணியினை மேற்கொள்வார்கள். கோட்டம், வட்டம் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் அலுவலகத்தில் வெள்ள பாதிப்பினை எதிர்கொள்ள 24 மணிநேரமும் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
