புத்தாண்டையொட்டி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை

ஓசூர், டிச.30:ஓசூரில் புத்தாண்டையொட்டி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி முரளி நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கூறியது, ஓசூர் மாநகரம் மாநில நுழைவு வாயிலில் உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த புத்தாண்டை முன்னிட்டு எவ்விதமான கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் தங்கும் விடுதிகள், அரங்குகளில் அனுமதி கிடையாது. அரசின் உத்தரவுப்படி விடுதிகள் மற்றும் அரங்குகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு டூவீலர், கார்களில் ஜாலியாக வலம் வந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories:

>