×

ஆயுர்வேத அழகு மற்றும் மூலிகை முடி மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி..!!

சென்னை: ஆயுர்வேத அழகு மற்றும் மூலிகை முடி மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், ஆயுர்வேத அழகு மற்றும் மூலிகை முடி மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வரும் 04.11.2025 முதல் 06.11.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தேங்காய் எண்ணெய் சோப்பு. மூலிகை சோப்பு, ஆயுர்வேத சோப்பு. மருத்துவ எண்ணெய் சோப்பு, மூலிகை முடி வளரும் எண்ணெய், மூலிகை ஃபேஸ் வாஷ் ஜெல் (உலர்ந்த மற்றும் எண்ணெய் தோல் பராமரிப்பு), மூலிகை முடி பராமரிப்பு சீரம். மூலிகை தோல் பராமரிப்பு சீரம், மூலிகை சுத்திகரிப்பான், உதட்டு பராமரிப்பு தைலம், முடி கண்டிஷனர். மூலிகை முடி சாயம், மூலிகை திரவம், மூலிகை வலி தைலம் போன்றவை மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032. 8668102600/8072914694.முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Enterprise Development and Innovation Institute ,Ayurvedic ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...