கடத்தூரில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

கடத்தூர், டிச.30: கடத்தூர் மேற்கு ஒன்றிய சார்பில் சில்லாரஅள்ளி ஊராட்சியில் அதிமுகவை நிராகரிப்போம், மக்கள் கிராமசபை கூட்டம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பி தாமரைச்செல்வன், ராஜேந்திரன் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மலர்கொடிமாரிமுத்து, கவுன்சிலர் சுகுணா ஆறுமுகம், குப்புசாமி கிருஷ்ணமூர்த்தி சந்தியன் துரைசாமி, தேவேந்திரன், சதீஸ்குமார் அரியா ராமலிங்கம், சரவணன் பழனி, செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல்,கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமையில் மடதஅள்ளியில், திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. ராஜேந்திரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ், குபேந்திரன், சிவப்பிரகாசம் உள்ளிட்ட பர் கலந்துகொண்டனர்.கடத்தூர் 11வது வார்டு வீரகனூர் பகுதியில் நகர செயலாளர் மணி தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முனிராஜ் சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி:தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் தொப்பூர் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிமுக ஆட்சியின் அவலநிலையை விளக்கும் துண்டு பிரசுரத்தை வீடு வீடாக சென்று எம்எல்ஏ வழங்கினார்.

Related Stories:

>