காங்கிரஸ் கட்சி நிறுவன விழா ராகுல் திடீர் வெளிநாடு பயணம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 136வது நிறுவன நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் ராகுல்காந்தி வெளிநாடு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 136வது நிறுவன நாள் விழா நாடு முழுவதும் கட்சி அலுவலகங்களில் நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்த விழாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் மூத்த தலைவர் அந்தோணி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் உடல் நலப் பிரச்னை காரணமாக கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை. ராகுல், திடீர் வெளிநாடு பயணமாக சென்றுள்ளதால் பங்கேற்க முடியவில்லை என செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்றுள்ளார். சிலநாட்களில் டெல்லி திரும்புவார்” என்று கூறியுள்ளார்.

Related Stories:

>