×

திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உத்திரமேரூர்: உத்தரிமேரூர் அருகே படூர் கிராமத்தில், திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உத்திரமேரூர் அடுத்த படூர் கிராமத்தில் சாலவாக்கம் ஒன்றிய திமுக சார்பில் கிளை நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  ஒன்றிய அவைத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் துரைவேல், மாவட்ட பிரதிநிதி அப்பாதுரை, மாணவரணி துணை அமைப்பாளர் மணி, தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார் வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அதிமுக அரசின் அவல நிலைகள்  குறித்து பேசப்பட்டது. மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளைஞரணி நிர்வாகி முரளி, விஷ்ணு, சத்தியா, ரத்தினமாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,executives ,meeting ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி