நண்பர்களுடன் பாலாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பாலாற்றில், நண்பர்களுடன் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.காஞ்சிபுரம், திருவள்ளுவர் நகர், தம்பிரான்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் பாலாஜி (18). பிளஸ் 2 முடித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பாலாஜி, தனது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (18), சந்துரு (24), ஜான் (17), விஷால் (13), விஜய் (17), கோபி (17) ஆகியோருடன் குருவிமலை அருகே பாலாற்றில் குளிக்கச் சென்றார்.அங்கு பாலாஜி, பாலத்தின் கீழ் தேங்கியுள்ள நீரில் குளிப்பதற்காக கரையில் இருந்து நீச்சல் அடித்துக் கொண்டு ஆற்றின் நடுவே சென்றார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் கரை திரும்பவில்லை. இதனல், நண்பர்கள், அலறி கூச்சலிட்டனர்.

அப்பகுதி மக்கள் வந்து, ஆற்றில் குதித்து, வாலிபரை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. தகவலறிந்து, காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் வந்து, தண்ணீரில் மூழ்கிய பாலாஜியை சடலமாக மீட்டனர். இதையடுத்து மாகரல் போலீசார், சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>