பெண்ணிடம் நகை பறிப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த கிதிரிப்பேட்டை விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதம் (54). இவரது வீட்டில் மாடுகளை வளர்க்கிறார். இந்நிலையில், நேற்று காலை நவநீதம், தனது மாடுகளை அக்கிராமத்தின் வயல்வெளி பகுதியில் மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். அப்போது, அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், இந்த சாலை எங்கு செல்கிறது என விசாரித்தனர். பின்னர் திடீரென, அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் செயினை திடீரென பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். புகாரின்படி வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>