திருவையாறு அருகே 15 ஆண்டாக வாய்க்கால்கள் தூர்வாரப்படாத அவலம்

தஞ்சை, டிச. 29: திருவையாறு அருகே 15 ஆண்டுகளாக தூர்வாராத வாய்க்கால்களை விரைந்து தூர்வாரக்கோரி தஞ்சை கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூர், தென்பெரம்பூர், பனவெளி, கடமங்குடி ஆகிய கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பிரமன்பேட்டை தலைப்பு இரட்டைவாய்க்கால் பிரிவு மூலமாக 4 கிராமங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக இந்த 4 கிராமங்களில் உள்ள வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் எதுவும் நடக்கவில்லை.  மேலும் இந்த வாய்க்கால்கள் முடியும் இடத்தில் மேற்கண்ட கிராமங்களின் 3 கி.மீ. தொலைவுக்கு வடிகால் வாய்க்கால்களாகவும் உள்ளன. இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் சரிவர தண்ணீர் வராமலும், வடியாமலும் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நீர்பாசன வாய்க்கால்களை தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>