×

தஞ்சை நகரில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்

தஞ்சை, டிச. 29: தஞ்சை நகரில் மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தஞ்சை கலெக்டரிடம் ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தகர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் கோவிந்தராவிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வர்த்தகர்கள், பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் தஞ்சாவூர் மாநகரம், பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. வங்கி, மருத்துவமனை, கடைகளுக்கு செல்ல பொதுமக்களும், பள்ளி, கல்லூரி செல்ல மாணவ, மாணவிகளும் இந்த வழியை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

அனைவருக்கும் இடையூறாகவும், விபத்துகளுக்கு காரணமாகவும் இருக்கும் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கடையை மூட வலியுறுத்தி கோரிக்கை விடுக்கும் வணிகர்களை, மதுக்கடையில் பார் வைத்திருக்கும் கும்பல் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. இதே நிலை நீடித்தால் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்படும். எனவே தாங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : siege ,store ,Tasmag ,Tanjore ,
× RELATED ஈரோட்டில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 25000 சேலைகள் பறிமுதல்