ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் உடைமை, வாகனங்கள் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

தஞ்சை, டிச. 29: தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீசாரின் உடமைகள், வாகனங்களை சரக டிஐஜி ஆண்டாய்வு மேற்கொண்டார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு பணியின்போது பயன்படுத்த 4 சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் உடமைகள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் பராமரிப்பு தன்மை குறித்து ஆண்டுக்கொரு முறை தஞ்சை சரக டிஐஜி ஆய்வு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் வாகனங்கள், சீருடைகள், தொப்பி, லத்தி உள்ளிட்டவைகளை டிஐஜி ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார். இதில் தஞ்சை எஸ்பி தேஷ்முக் சஞ்சய் சேகர் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>