பெண் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, டிச. 29: திருக்காட்டுப்பள்ளி அருகே நோய் கொடுமையால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். திருக்காட்டுப்பள்ளி அருகே வரகூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்வாணன் (70). இவரது மகள் தமிழ்மணி (26). இவர் பிகாம் முடித்து வீட்டில் இருந்தார். இவருக்கு ஆஸ்துமா நோய் பாதிப்பு உள்ளது. பனி காலமானதால் நோயால் மூச்சு விட மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். இந்த நோய் கொடுமை தாங்க முடியாமல் மனமுடைந்து கடந்த 24ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயக்கமடைந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருக்காட்டுப்பள்ளி சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.

Related Stories:

>