சேலம் சரகத்தில் கொரோனாவுக்கு 734 பேர் பலி

சேலம், டிச.29: சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 734 பேர்  கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 8.15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12ஆயிரத்து 80 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவை  தடுக்க, மாநிலம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் சரகத்தில், நேற்று  வரை 56,854 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 734 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதனால் சுகாதார பணியாளர்கள், சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர்.  பொது மக்கள் மாஸ்க் அணியாமல்  கட்டுப்பாடு இல்லாமல் சுற்றி வருவதாலும், கடைகளில் சமூக இடைவெளியை  கடைபிடிக்கதாததாலும், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>