×

சேலம் சோனா கல்லூரியில் இயற்கை மருத்துவ படிப்புக்கு மாணவர் சேர்க்கை ஆரம்பம்

சேலம், டிச.29: சேலம் சோனா கல்வி குழுமம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்துடன் இணைந்து தமிழக அரசின் அங்கீகாரம் பெற்று பிஎன்ஒய்எஸ் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் இளங்கலை ஐந்தரை ஆண்டு படிப்பிற்கான, 100 இடங்களுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது. இதில் 65 இடங்கள் அரசு ஒதுக்கீடு 35இடங்கள் மேலாண்மைக்கு ஒதுக்கிடப்பட்டு, மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.  இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ கல்லூரி, டிஜிட்டல் நூலகம், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு முதல் வருடத்திலிருந்து ஆராய்ச்சி முறையில் பயிற்சி அளிக்கப்படும்.இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் சாதனைகளை புரிய வேண்டும் என்று கல்லூரி மேலாண்மை அறங்காவலர் தியாகு வள்ளியப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

சோனா மருத்துவக் கல்லூரியில் ஆயுஷ் சிகிச்சையகம் (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா) செயல்படுகிறது.மசாஜ், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, நறுமண சிகிச்சை, குத்தூசி மருத்துவம், அக்குபிரஷர்,பிசியோதெரபி, போன்ற இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி நோய்களுக்கான சிகிச்சை வழங்கப்படும் என சோனா இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மதன்குமார் கூறினார். அப்போது சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார்,கலை அறிவியல் கல்லூரி முதல்வர் காதர்நவாஷ் ஆகியோர் உடனிருந்தனர். ...


Tags : Salem Sona College ,
× RELATED திருநங்கை மர்மச்சாவு