×

விவசாயிகளுக்கு ஆதரவாக ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேலம், டிச.29: மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் பல்வேறு மாநில விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, சேலத்தில் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி அன்வர் தலைமை வகித்தார். செயலாளர் நசீர் அஹமத் வரவேற்றார். நாயப் முத்தவல்லி ஷேக் பரீத், துணை செயலாளர் மொய்தீன் சேட் முன்னிலை வகித்தனர். இதில், அரபிக்கல்லூரி பேராசிரியர் அபுதாஹிர் பாகவி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், அனைத்து ஜமாத்கள், முத்தவல்லிகள், உலமாக்கள், இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jamaat ,protests ,
× RELATED தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை