×

ஆரோக்ய மருந்து பெட்டகம் மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதியில் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

மணப்பாறை, டிச. 29: மணப்பாறை, துவரங்குறிச்சி பகுதிகளில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ தலைமையில் இந்த சுற்றுப்பயண பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிகளில் முன்னாள் சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா, முன்னாள் எம்எல்ஏ சேகரன், மாவட்ட பொருளாளர் பண்ணப்பட்டி கோவிந்தராஜ், ஒன்றியக் குழு தலைவர்கள் மருங்காபுரி பழனியாண்டி, மணப்பாறை அமிர்தவள்ளி, ஒன்றிய செயலாளர்கள் மருங்காபுரி செல்வராஜ், சின்ன அடைக்கன், மணப்பாறை ராமசாமி, வையம்பட்டி சபியுல்லா, நகர செயலாளர் மணப்பாறை கீதா மைக்கேல் பொன்னம்பட்டி பழ.கருப்பையா உள்பட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். முன்னதாக உதயநிதி ஸ்டாலினுக்கு மணப்பாறை மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலர் வீரமணி தலைமையில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Udayanithi ,Manapparai ,Tuvarankurichi ,
× RELATED மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை...