உத்தமபாளையம் அருகே பரபரப்பு தமிழாசிரியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு முன்விரோதமா போலீசார் விசாரணை

உத்தமபாளையம், டிச. 29: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர், உத்தமபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரிராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராயப்பன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் கோவையில் பேராசிரியாராகவும், மற்றொருவர் மதுரையில் பல் மருத்துவம் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேகர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது வீட்டின் முன்பக்கம், 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதில், ஒன்று மட்டும் எரிந்தது. இரண்டு வெடிக்காமல் சிதறியது. சத்தம் கேட்டு எழுது வந்த சேகர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். கதவை திறந்து பார்த்தபோது மர்மநபர் ஒருவர் பைக்கில் தப்பி ஓடினார். இது குறித்த புகாரின்பேரில் ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் உத்தமபாளையம் டி.எஸ்.பி. சின்னகண்ணு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். தேனியில் இருந்து வந்த தடயவியல் நிபுணர்கள், குண்டு வீசிய இடத்தை ஆய்வு செய்தனர். சேகருக்கு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா ? வீசப்பட்டது பெட்ரோல் குண்டா அல்லது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலா என போலீசார் விசாரித்து வருகின்

Related Stories:

>