×

போடி தொகுதியில் முதியோர் உதவித்தொகை முறையாக கிைடக்கவில்லை மக்கள் கிராம சபை கூட்டத்தில் தங்கதமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு

தேனி, டிச.29: தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் உள்ள தெற்கு ஜெகநாதபுரத்தில் பேரூர் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பேரூர் திமுக பொறுப்பாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் ஜோதிராம் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் பேசும்போது:தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் குடும்பம் மட்டும் நன்றாக உள்ளது, பொதுமக்கள் அவதிப்படுகின்றனர், போடி தொகுதியில் முதியோர் பணம், விதவை உதவித்தொகை கிடைக்கவில்லை. ஆனால், ஓபிஎஸ் குடும்பம் மட்டும் வளமாக உள்ளது. தேர்தல் வந்தவுடன் பெட்டிகளில் பணத்தை நிரப்பிக் கொண்டு வந்து வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கலாம் என்று நினைப்பார்கள். வரக்கூடிய தேர்தலில் எத்தனை நூறு கோடி செலவழித்தாலும் அதிமுக வெற்றி பெறாது என்றார். கூட்டத்தின்போது நிராகரிப்போம், நிராகரிப்போம்’ அதிமுகவை நிராகரிப்போம் என பொதுமக்கள் கோஷம் எழுப்பினர். மேலும், அதிமுக ஊழல் குறித்து தூண்டு பிரச்சாரத்தை வீதி, வீதியாக திமுகவினர் வழங்கினர். இதில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் அய்யப்பன், சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் அருள்வாசகன், வக்கீல்கள் ராஜசேகர், மணி மற்றும் சிலம்பரசன். ராஜன், இளம்வழுதி, குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : constituency ,Bodi ,
× RELATED கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில்...