திண்டுக்கல்லில் வாலிபர் சங்கத்தினர் நடைபயணம்

திண்டுக்கல், டிச. 29: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று நடைபயணம் மேற்கொண்டனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், திண்டுக்கல் மாவட்ட அரசு துறைகளில் உள்ள 4 ஆயிரம் காலி பணியிடங்களில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்கிட கோரியும், மின்சார வாரியம் நடத்திய கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்ற 10 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை உடனடியாக வழங்கக்கோரியும், அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தி தரமான மருத்துவம் மக்களுக்கு வழங்கக்கோரியும், திண்டுக்கல் சவேரியார் பாளையத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று காலை நடைபயணம் மேற்கொண்டனர். பேகம்பூர், மேட்டுப்பட்டி, நாகல் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாக சென்ற நடைபயணம் நிறைவாக மாநகராட்சி அலுவலகம் அருகே பொதுக்கூட்ட மேடை அருகே முடிவடைந்தது. இதில் மாநில தலைவர் ரெஜீஷ்குமார், மாநில செயலாளர் பாலா, மாவட்ட தலைவர் விஷ்ணுவர்த்தன், மாவட்ட செயலாளர் பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>