ஆட்சி மாற்றம் வரும்: திமுக வெற்றி பெறும் பி.மூர்த்தி எம்எல்ஏ பேச்சு

மதுரை, டிச. 29: மதுரையை அடுத்த பொய்கைக்கரைப்பட்டி, ஒத்தக்கடை, கருப்பாயூரணி ஆகிய இடங்களில் திமுக ெசயல்வீரர்கள் கூட்டம், வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தரபாண்டியன் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்தது. வக்கீல் கலாநிதி முன்னிலை வகித்தார். இக்கூட்டங்களில் வடக்கு மாவட்டச்செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ பேசுகையில், `` மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்தச்சட்டத்தை எதிர்த்தும், வாபஸ் பெறக்கோரியும் போராட்டங்கள் நடக்கிறது. ஆனால், அதிமுக அரசு, மத்திய அரசுக்கு துணைபோகிறது. பொங்கலுக்காக ரூ.2500 டோக்கன் வழங்கப்படும் என அதிமுக அரசு அறிவித்துள்ளது. அது நம் வரிப்பணம், அரசுப்பணம். கொரோனா காலத்தில் எத்தனையோ குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்தன. தொழில் நசுங்கி பாதிப்படைந்தனர். அப்போது குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கலாமே? எத்தனை கோடி கொடுத்தாலும், ஆட்சி மாற்றம் வரும். திமுக வெற்றிபெறும்’’ என்றார். பொய்கைக்கரைப்பட்டியில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வெங்கடேசன், விஜயலட்சுமி, மதிவாணன், ரேணுகா ஈஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒத்தக்கடையில் நடந்த கூட்டத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் அ.ப.ரகுபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, நிர்வாகிகள் வக்கீல் மூர்த்தி, சரவணன், வடிவேல்முருகன், கிழக்கு ஒன்றிய சேர்மன் மணிமேகலை உள்ளிட்டோரும், கருப்பாயூரணியில் நடந்த கூட்டத்தில் ஒன்றியச்செயலாளர் ஹக்கீம், நெசவாளர் அணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Related Stories:

>