கள்ளந்திரி கோயிலில் இருமுடி செலுத்தலாம்

மதுரை, டிச. 29: மதுரை மாவட்ட அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் சார்பில் ஆண்டுதோறும் சபரிமலையில் துப்புரவு பணி, அன்னதானம், முதலுதவி உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறது.  இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக 45 ஆயிரம் பேருக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், தொற்று காரணமாக சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் தங்களது இருமுடியை மதுரை கள்ளந்திரியில் உள்ள சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில், அய்யப்பன் கோயிலில் செலுத்தலாம். இதுவரை இதுபோல் 50 பேருக்கு மேல் இருமுடி செலுத்தியுள்ளனர். குழுவாக செல்ல முடியாதவர்களும் இங்கு நெய் அபிஷேகம் ஆராதனை செய்து வருகின்றனர். இக்கோயிலில் நேற்று முன்தினம் மண்டல அபிஷேக விழா சிறப்பாக நடந்தது.

Related Stories:

>