ஒரே நாளில் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வாகனங்கள் படையெடுப்பு

மதுரை, டிச.29: தகுதிச்சான்று நீட்டிப்பு செய்தது தெரியாமல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேற்று ஒரே நாளில் வர்த்தக வாகனங்கள் படையெடுத்தன. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் தளர்வுடன் கூடிய ஊரடங்கு நடந்து வருகிறது. இதனால் வர்த்தக வாகனங்கள் தகுதிச்சான்று டிச.31ம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தகுதிச்சான்று வரும் 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை எடுத்துக்கொள்ள தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது தெரியாமல் வர்த்தக வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனத்திற்கு பெயிண்ட் செய்து வட்டார போக்குவரத்து அலுவலங்களில் படையெடுத்து வந்தனர்.  மதுரை மத்தி, வடக்கு மற்றும் தெற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு தகுதிச்சான்று எடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நேற்று ஒரே நாளில் வந்திருந்தன. அதிகளவில் வாகனங்கள் வந்திருந்ததால் ஆர்டிஓக்கள், மோட்டார் ஆய்வாளர்கள் தணிக்கை செய்ய முடியாமல் திணறினர்.

Related Stories: