சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சாயல்குடி, டிச.29:  மார்கழி மாத சிறப்பு பிரதோஷத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலில் நந்திதேவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. சாயல்குடி அருகே மாரியூர் பவளநிறவள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர், மேலக்கிடாரம் சிவகாமிஅம்பாள் உடனுரை திருவனந்தீஸ்வரமுடையார், சாயல்குடி மீனாட்சியம்மன் உடனுரை கைலாசநாதர், டி.எம். கோட்டை கருணாகடாச்சி உடனுரை செஞ்சிடைநாதர், மங்களம் ரேணுகாம்பாள் உடனுரை ஆதிசிவன் ஆகிய கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள், விஷேச பூஜைகள் நடந்தது. கோயில்களிலுள்ள நந்திதேவருக்கு பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

Related Stories:

>