பள்ளியில் திருட்டு

காரைக்குடி, டிச.29: காரைக்குடி கணேசபுரம் பகுதியில் பாரதி நகர்மன்ற நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியை கடந்த 24ம் தேதி ஆசிரியர்கள் மூடிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை பள்ளிக்கு வந்தபோது தலைமையாசிரியர் அறை கதவு உடைக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த 3 லேப்டாப், பயோமெட்ரிக் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஒன்று ஆகியவை திருடு போய் இருந்தது. இதுகுறித்து ஆசிரியர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>