×

பொங்கல் பண்டிகையையொட்டி ஆர்டர் வரத் துவங்கியதால் பாத்திர உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர்,டிச.29:  பொங்கல் பண்டிகையையொட்டி, பானை ஆர்டர் வரத் துவங்கி உள்ளதால், அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழர் திருவிழாவான பொங்கல் பண்டிகையை நகரங்களில் பெயரளவுக்கு  நடத்தினாலும், விவசாயம் சார்ந்த நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்தக் காலத்தில், மண் பானையில் பொங்கலிட்டு வந்தனர். நாகரிக வளர்ச்சியால், அவரவர் வசதிக்கேற்ப வெண்கலம், பித்தளை,எவர்சில்வர் பானைகளில் பொங்கலிடுகின்றனர். திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்றியுள்ள வேலம்பாளையம், அங்கேரிபாளையம், திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம், செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, வெண்கலம், செம்பு உள்ளிட்ட உலோகங்களில் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பண்டிகையையொட்டி, பொங்கல் பானை உற்பத்திக்கான ‘ஆர்டர்’ வருகையால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து பாத்திர உற்பத்தியாளர்கள் கூறுகையில்,கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கார்த்திகை மாதம் முதல் ஆர்டர் வர துவங்கியுள்ளது. தரமான தகடுகளில், பானை உற்பத்தி செய்தல், நுணுக்கமான வேலைபாடு, குறிப்பிட்ட நேரத்தில் ஆர்டரை முடித்து கொடுப்பது, நல்ல தரம், போன்றவற்றால் மாநிலம் முழுதும் இருந்தும் ஆர்டர் கொடுக்க வியாபாரிகள் விரும்புகின்றனர் என்றனர்.

Tags : utensil makers ,festival ,Pongal ,
× RELATED நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா