- திமுக
- சென்னை
- பொதுச்செயலர்
- Duraimurugan
- பாஜக அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஒன்றிய பாஜ அரசின் முன்பு ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரையை திமுக தொடங்கவுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்புக்காக ” திமுக மாவட்ட செயலாளர்கள் – மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – தலைமை செயற்குழு உறுப்பினர்கள் –
ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்” வரும் 28ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ப்ளூயன்ஸ் ஹாலில் நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் – மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் – தலைமை செயற்குழு உறுப்பினர்கள்-ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
