துவக்கப்பள்ளி சீரமைப்புக்கான ஆலோசனை கூட்டம்

உடுமலை,டிச.29:உடுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் பொறுப்பு வகித்தார். மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர் மர்யபுஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுய உதவி குழு பொறுப்பாளர்கள், பெற்றோர் ஆசிரியர்  சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒன்றிய பொறியாளரை அழைத்துவந்து சீரமைப்பு பணிகளை திட்டமிடுவது, உடைந்த ஓடுகளை மாற்றுவது,  பழுதடைந்த ஜன்னல், கதவுகளை புதுப்பிப்பது, இரண்டு வகுப்புகளுக்கிடையில் மறைப்பு ஏற்படுத்துவது, மக்கள் பிரதிநிதிகளை அணுகி கான்கிரீட் கூரை அமைத்து தரக்கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>