2021 மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு பணி துவங்கியது

ஊட்டி,டிச.29: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2021ல் நடக்கும் மலர் கண்காட்சிக்காக நடவு பணிகள் நேற்று துவக்கப்பட்டது.  ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இவர்களை மகிழ்விக்க ஆண்டு தோறும் மே மாதம் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சியின் போது பூங்கா முழுவதிலும் பல வகைககளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதில் பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல்,. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகள் அலங்கரிக்கப்பட்டு அழகான வடிவங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். மேலும், பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்டுள்ள பல லட்சம் மலர் செடிகளில் ஏப்ரல் மாதம் முதலே மலர்கள் மலர துவங்கி விடும்.மலர் செடிகளின் வளர்ச்சி காலத்தை பொறுத்து விதைகள் விதைக்கும் பணிகள் துவக்கப்படும். ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் விதைகள் சேகரிக்கும் பணிகள் துவங்கி இரு மாதங்கள் நடக்கும்.

தொடர்ந்து, நாற்று உற்பத்தியும் மேற்கொள்ளப்படும். அதன்பின், டிசம்பர் மாதத்தில் விதைகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். 2021 மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்கான நடவு பணிகள் நேற்று ஊட்டியில் துவங்கியது. தாவரவியல் பூங்காவில் உள்ள பேண்ட் ஸ்டேண்ட் பகுதியில் நடவு பணிகள் துவங்கியது. இம்முறை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், ஏஸ்டில்மே, அல்கிமில்லா,  எரிசிமம், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரனுன்குலா், ஆர்னமென்டல்  கேல், ஓரியண்டல்லில்லி உட்பட 290 வகையான 5 லட்சம் மலர் செடிகள் நடவு  செய்யப்படவுள்ளது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நாற்று நடவு பணிகளை துவக்கி வைத்தார்.

Related Stories:

>