மின்னணு வாக்கு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் ஆய்வு

ஊட்டி,டிச.29: ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களை பெல் நிறுவன பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதன் ஐந்து ஆண்டு காலம் நிறைவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக் தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் பெட்டிகள் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணிகள் நேற்று ஊட்டியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா முன்னிலை வகித்தார். இதில், பெல் நிறுவன பொறியாளர்கள் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்து சரிபார்த்தனர். அப்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சியினர் பிரதிநிதிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>