×

ஜி.கே.வாசன் 56வது பிறந்த நாள் விழா 2 ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை

கோவை,  டிச. 29: தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) தலைவர் ஜி.கே.வாசன் 56வது பிறந்த  நாள் விழா கோவையில் நேற்று நடந்தது. இதையொட்டி, கோவை மாநகர் தெற்கு மாவட்ட  த.மா.கா. சார்பில் ஆடீஸ் வீதியில் உள்ள மூப்பனார் பவனில் நடந்த  நிகழ்ச்சிக்கு மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி.வாசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் அன்னூர் ராமலிங்கம் (புறநகர் வடக்கு), குணசேகரன் (புறநகர்  தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் கோவை தங்கம்,  கட்சிக்கொடி ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினார்.இதன்பின்னர், மாநில  செயலளர் பொன்.ஆனந்தகுமார் தலைமையில் தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை  நடந்தது. அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து,  கணபதி, கவுண்டம்பாளையம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சியில், 2 ஆயிரம்  பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. இவற்றை, மாநில துணை தலைவரும்,  வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை தங்கம் தனது சொந்த செலவில்  வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம்,  இளைஞர் அணி மாநில துணை தலைவர் அருண்பிரகாஷ், நிர்வாகிகள்  சி.ஆர்.ரவிச்சந்திரன், சிகாமணி, பொன்.ஆனந்தகுமார், செல்வராஜ், ராஜ்குமார்,  கார்த்திக் கண்ணன், வளர்மதி கணேசன், அய்யாசாமி, காலனி மயில்சாமி, கண்ணன்,  வின்சென்ட், சார்லஜ், எஸ்.பி.சாமி, தமிழன் பாபு, சுகுமார், மதிபாலா  ஜெயக்குமார், ராம்நகர் சக்தி, குனிசை ரவிச்சந்திரன், விஜயராணி, தியாகராஜன், பாலு, அருண்பிரகாஷ் உள்பட பலர்  பங்கேற்றனர்.


Tags : GK Vasan 56th Birthday Celebration ,women ,
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ