திருச்செங்கோடு அருகே இலவச சித்த மருத்துவ முகாம்

திருச்செங்கோடு, டிச.29: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் தினவிழா மற்றும் இலவச சித்த மருத்துவ  முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வட்டூர்  சந்திரசேகர்  தலைமை வகித்து பேசினார். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கபசுர சூரணம் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலம் விரும்பும் தேசிய அமைப்பின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். சித்த மருத்துவர்  டாக்டர் பூபதி ராஜா பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தார். அமுத வேர்கள் அமைப்பின் செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Related Stories:

>