×

மதுரை மாநகராட்சி மேயர் ராஜினாமா ஏற்பு: சிறப்பு கூட்டத்தில் தீர்மானம்

மதுரை: மதுரையில் நேற்று நடந்த மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தில் மேயர் இந்திராணி ராஜினாமாவை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுரை மாநகராட்சி வரி வசூலில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி வரிவிதிப்புகுழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். மேயரின் கணவர் பொன்வசந்த் உள்ளிட்ட சிலர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.

ஏற்கனவே, மேயரின் கணவர் பொன்வசந்த், மாநகராட்சி பணிகளில் தலையிடுவதாக கூறி அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நீக்கியது. இதையடுத்து மேயர் இந்திராணி, தனது குடும்ப சூழல் காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக கூறி மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயனிடம் கடந்த 15ம் தேதி கடிதம் வழங்கினார். இந்நிலையில், மதுரை மாநகராட்சி சிறப்புக் கூட்டம் துணைமேயர் நாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மேயரின் ராஜினாமா கடிதத்தை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேதி குறிப்பிடாமல் மாநகராட்சி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags : Madurai Corporation ,Mayor ,Madurai ,Indrani ,Corporation ,Ponvasanth ,Corporation Taxation Committee… ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!