- வீரபாண்டியன்
- எடப்பாடி
- ஆர்எஸ்எஸ்
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- Mutharasan
- அஇஅதிமுக
- ஜனநாயக
- AIADMK...
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், முன்னாள் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி அளித்தனர். வீரபாண்டியன் கூறியதாவது: அதிமுக 54வது ஆண்டு விழா கொண்டாடி இருக்கின்றனர். அதிமுக போன்ற ஜனநாயக கட்சிகள் இருக்க வேண்டும்.
ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று தற்போது இல்லை. கம்யூனிஸ்ட்களை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் குரலாக எடப்பாடி மாறி இருக்கிறார். இது தமிழகத்துக்கு ஆபத்தானது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் அனுமதி மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
