×

துரோகி எடப்பாடிக்கு பாடம் புகட்டுவோம்: டிடிவி.தினகரன் ஆவேசம்

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள திருமண மண்டபத்தில் அமமுக சார்பில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: எம்.ஜி.ஆர் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கியபோது உருவாக்கிய விதிகளை எல்லாம் எடப்பாடி பழனிசாமி நீக்கி விட்டார். புதிய விதிகளை உருவாக்கி தன்னுடைய ஆதரவாளர்களை கொண்டு அக்கட்சியின் பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் உள்ளனர். ஆனால் பழனிசாமி கட்சியிலிருந்து களையை நீக்கி விட்டதாக சொல்கிறார். உண்மையில் அவர் துரோகத்தின் நஞ்சு செடியாக இருந்து கட்சியை அழித்து வருகிறார். தற்போது உள்ளது அதிமுக என்ற கட்சியே இல்லை. பழனிசாமி உருவாக்கிய கட்சியாகும்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் துரோகம் என்ற சிந்தனையே வராத வகையில் அமமுக கட்சியினர் ஒருங்கிணைந்து அவருக்கு பாடம் புகட்டுவார்கள். அமமுக கூட்டணி துரோகிகளுக்கு பாடம் புகட்டுவதோடு மட்டுமில்லாமல், வரும் தேர்தலில் வெற்றி கூட்டணியாகவும் அமையும். இந்தியா வளர்ந்து வரும் நாடு. அதில் தமிழ்நாடு வளர்ச்சி நோக்கி பயணித்து வருகிறது. இந்த நிலையில் இன்னமும் இங்கு பலதரப்பு மக்கள் வாழ்வாதாரம் முன்னேறாமல் உள்ளது. அவர்களுக்கான திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தலாம். இலவச திட்டங்கள் அதிகமாக உள்ளது. இதனை அரசியல்வாதிகள் சிந்திக்க வேண்டும். வருகின்ற 2026 தேர்தலில் எந்த கூட்டணியில் இருந்தாலும் சோளிங்கர் தொகுதி அமமுக வேட்பாளராக என்.ஜி.பார்த்திபன் களம் காண்பார். இவ்வாறு அவர் பேசினார்.

* கரூர் சம்பவத்தில் யார் மீதும் குற்றம் சொல்ல இயலாது
டிடிவி.தினகரன் பேசும்போது, ‘கரூரில் நடந்த துயர சம்பவம் ஒரு விபத்து. அதில், விஜய் மீதும், காவல்துறை என்று யார் மீதும் குற்றம் சொல்ல இயலாது. சில கட்சியினர் இதனை அரசியல் ஆக்குகிறார்கள். அதே நேரத்தில் இதுதொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரித்து உண்மையை சொல்ல வேண்டும்’ என்றார்.

Tags : DTV ,Dinakaran ,Solinger ,Solinger Assembly Constituency Activists Consultative Meeting ,Amuka ,Ranipet District, Solinger ,Secretary General ,DINAKARAN SPOKE ,M. ,R Adimuka ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...