அரூர் ஆர்டிஓ அலுவலகம் முன் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரூர், டிச.29: அரூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, 8 வழிச்சாலைக்கு 92 சதவீத விவசாயிகள் தாமாகவே முன்வந்து நிலங்களை வழங்கியுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளது பொய்யான தகவல். இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். விவசாய குடும்பத்தில் பிறந்த முதல்வர், விவசாயிகளின் வலியை உணர்ந்து தாமாகவே முன்வந்து 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்ட குழுவினர் ஆசிரியர் வேலு, விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர்கள் குமரவேல், வேங்கன், பழனியப்பன், அருள்இ அர்ச்சுனன், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகளின் போராட்டத்தையொட்டி அரூர் முழுவதும் போலீசார்

குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories:

>