×

கலெக்டர் ஆபிசில் மகள்கள் மகனுடன் மூதாட்டி தர்ணா

தர்மபுரி, டிச.29:தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சொத்தை தந்தை விற்க முயற்சி செய்வதாகவும், பல்வேறு பிரச்னைகள் செய்து வருவதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பி.அக்ரகாரம் அருகே கருபையனஅள்ளியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி பஞ்சுயம்மாள்(60). இவர்களுக்கு ஜெயராணி (36), கலைவாணி (35), மனநிலை பாதிக்கப்பட்ட சின்னசாமி (33) ஆகியோர் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் நடக்காமல் முதிர்கன்னியாகவே உள்ளனர். சிறு குழந்தைகளாக இருந்தபோதே பெருமாள் குடும்பத்தைவிட்டு பிரிந்து வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் பஞ்சுயம்மாள் கூலிவேலை செய்து குழந்தைகளை வளர்த்துவள்ளனார்.

இந்நிலையில் பஞ்சுயம்மாள், தனது மகள்கள் ஜெயராணி, கலைவாணி, மனநலம்பாதிக்கப்பட்ட மகன் சின்னசாமி ஆகியோரை குடுபத்துடன் அழைத்து கொண்டு நேற்று மாவட்ட கலெக்டர் அவலத்திற்கு வந்தனர். அங்கு கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் கலெக்டரை சந்திக்க அனுமதி மறுத்தனர். இதனால் வேதனை அடைந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். தகவலின் பேரில்., வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். இதுகுறித்து கலைவாணி கூறியதாவது: நாங்கள் சிறுவயதாக இருந்தபோது, தந்தை எங்களைவிட்டு பிரிந்து சென்று, வேறு திருமணம் செய்துகொண்டார். எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை.

நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திவிட்டனர். எங்களது தாத்தா சொத்தை, எனது தந்தை விற்க முயற்சிக்கிறார். அதற்காக எங்களை வீட்டைவிட்டு காலி செய்யவும், விவசாய நிலத்தை அபகரிக்கவும் பல்வேறு முயற்சி எடுத்து வருகின்றனர். பக்கத்தில் வசிக்கும் நபர் கும்பலுடன் வந்து எங்களுக்கு பாலியல் தொல்லை, கொலை மிரட்டல் விடுக்கிறார். எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை.இதுகுறித்து பென்னாகரம் போலீசில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர், எஸ்பி எங்கள் மனு மீது நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கலைவாணி கூறினார்.

Tags : Tarna ,daughters son ,Collector Office ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...