தமாகா சார்பில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா

தர்மபுரி, டிச.29: தர்மபுரி மேற்கு மாவட்ட தமாகா சார்பில், தலைவர் ஜி.கே.வாசன் எம்பியின் 56வது பிறந்த நாள் விழா நடந்தது. விநாயகர் கோயில், கோட்டை மல்லிகார்ஜூன சுவாமி கோயில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நடந்த விழாவுக்கு, மாவட்ட தலைவர் புகழ் தலைமை வகித்தார். நகர தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கோவிந்தன், மாவட்ட துணைத்தலைவர்கள் ராமன், ராஜேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் விவேக், மாவட்ட இளைஞர் அணி தலைவர் கிஷோர் முன்னிலை வகித்தனர். பின்னர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கொடி ஏற்றி  வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், வர்த்தக அணி தலைவர் பாபு, மகளிரணி தலைவி கலையரசி, வட்டார தலைவர்கள் பெரியண்ணன், ஞானசேகரன், மகாலிங்கம், தொழிற்சங்க தலைவர் பழனி, பாலக்கோடு நகர தலைவர் குமார், நிர்வாகிகள் சிவலிங்கம், ரமேஷ், இளைஞரணி கிஷோர், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories:

>