×

யாரிடமும் பாரபட்சம் காட்ட கூடாது காவல் நிலையங்களுக்கு வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள்


நாகர்கோவில், டிச.29: கிராம அளவில் குழுக்கள் அமைத்து, ெபாதுமக்களுடன் நல்லுறவை பேண வேண்டும். போலீசார் பாரபட்சம் இல்லாமல் நடந்து ெகாள்ள வேண்டும் என டி.எஸ்.பி. கூறினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணையின் போது தந்தை, மகன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின், போலீஸ், பொதுமக்கள் இடையேயான இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் தென் மண்டல ஐ.ஜி. முருகன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை பேணும் வகையில் கிராம அளவில் குழுக்கள் அமைக்க ஐ.ஜி. முருகன் உத்தரவிட்டுள்ளார். போலீசார் அதிகளவு கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுடன் நெருங்கி பழக வேண்டும். அவர்களது பிரச்னைகளை தெரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் நிலையங்களில் கிராம குழுக்கள் அமைப்பது, இதற்காக தனியாக போலீசாரை நியமிப்பது தொடர்பான நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.  குமரி மாவட்டத்திலும் எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் படி இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய குழுக்கள் அமைத்தல் தொடர்பான  கூட்டம் கோட்டாறு காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி. வேணுகோபால் தலைமை வகித்தார். கோட்டாறு, வடசேரி, ஆரல்வாய்மொழி, நேசமணிநகர், பூதப்பாண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து போலீசார் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், டிஎஸ்பி வேணுகோபால் பேசுகையில்,  கிராமங்களில் உள்ள மக்களுடன் போலீசார் அதிகளவு நல்லுறவு பேண வேண்டும். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு போலீசார் நடந்து கொள்ள வேண்டும். காவல் நிலையங்களில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். அனைவருக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களிடம் கனிவாக நடந்து ெகாள்ளும் போது, தங்கள் பிரச்சினைக்கு காவல் நிலையங்களில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை சாமான்ய மக்களின் மனதில் ஏற்படுத்த முடியும். பல்வேறு குழுக்கள் உள்ளன. பல்வேறு சங்கங்களும் உள்ளன. இந்த சங்கங்களுடன் நல்லுறவை பேண வேண்டும். அப்போது சில பிரச்னைகளுக்கு நாம் எளிதில் தீர்வு காண முடியும் என்றார்.

Tags : anyone ,police station ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்