×

உடன்குடி ஒன்றியத்தில் புதிய வேளாண் சட்ட விளக்க கூட்டம்

உடன்குடி,டிச.29: உடன்குடி ஒன்றியத்தில் வேப்பங்காடு, நேசபுரம் கிராமங்களில் பாஜ சார்பில் வேளாண்மை சட்ட விளக்க கூட்டம் நடந்தது. வேப்பங்காட்டில் நடந்த கூட்டத்திற்கு  பாஜ ஒன்றிய தலைவர் ஜெயக்குமார்    தலைமை வகித்தார். மாவட்ட விவசாயஅணி பொதுச்செயலர் திருநாகரன், ஒன்றிய விவசாய அணி தலைவர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மாவட்ட பொதுச் செயலர் சிவமுருகன் ஆதித்தன் பேசினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன் இசக்கி, ஒன்றிய பொதுச்செயலர் சங்கரகுமார், ஒன்றிய துணைத் தலைவர்கள் பசுபதி சிவசிங், சின்னத்துரை, துரைராஜ், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஐயப்பன் உட்பட திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு