×

இலவச சித்த மருத்துவ முகாம்

விளாத்திகுளம்,டிச.29: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவப் பிரிவு, விளாத்திகுளம் அரசு மருத்துவமனை மற்றும் சத்யசாய்சேவ சமிதி சார்பில் விளாத்திகுளம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில்  இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. முகாமுக்கு  விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி முன்னிலை வகித்தார். முகாமில் மூலிகை கண்காட்சி,மூலிகை உணவு கண்காட்சி மற்றும் மூலிகை மருத்துவ கண்காட்சி நடத்தப்பட்டது.  முகாமில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் பிரவின்,மகாலட்சுமி,சித்த மருத்துவ அலுவலர் தமிழ் அமுதன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் சாந்தி, விஜயலதா,சுப்புத்தாய்,விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்திராமசந்திரன்,ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,நடராஜன்,மருந்தாளுநர்கள் தமிழ்செல்வி,பழனிமுத்தம்மாள்,மருத்துவனை பணியாளர் குழந்தைசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : camp ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு