உற்பத்தி மானியம் ஒதுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: செய்யாறு ஆர்டிஓ அலுவகம் முன்

செய்யாறு, டிச.29: செய்யாறில் கட்சிகள் சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் ஆர்டிஓ அலுவகம் முன் அரசு உணவு மான்யத்திற்கு ஈடாக உற்பத்தி மான்யம் ஒதுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது: 1954ன் அத்தியாவசிய விலை கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் வேளாண் விளைபொருட்கள் விலையை கட்டுப்படுத்தியது. அதன் விளைவாக கடந்த 50 ஆண்டுகளில் வேளாண் விளை பொருட்களின் விலை 20 மடங்கு உயர்ந்தது.

ஆனால் உழவு, உரம், கூலி என உற்பத்தி செலவு 300 மடங்கு உயர்ந்துள்ளதால், விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், பிற வருமானம் கொண்டே விவசாய சாகுபடி செய்து வருகிறோம். இதன்காரணமாக நான்கில் ஒரு பங்கு விவசாய நிலங்கள் தரிசாக மாறிவிட்டது. எனவே விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடவேண்டும். மேலும், உணவு மான்யத்திற்கு ஈடாக உற்பத்தி மான்யம் ஒதுக்க வேண்டும். மத்திய அரசு பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தில் ₹6 ஆயிரம் வழங்குவதை போல், மாநில அரசும் ₹18 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

பிரதமர் வழங்கிய ஊக்கத்தொகை தமிழகத்தில் 76 லட்சம் பட்டாதாரர்களின், 40 லட்சம் பட்டாதாரர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகவும் மீதமுள்ள விவசாயிகள் பட்டா மாற்றம் பதிவு செய்யாததால் அவர்களுக்கு அந்த சலுகை சேரவில்லை என்று பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து ஆர்டிஓ விமலாவை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கி அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories:

>