×

மாவட்டங்களில் சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் திமுக தலைவரிடம் ேதர்தல் அறிக்கை தாக்கல் செய்யப்படும்


நெல்லை, டிச. 29:  அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் அறிக்கை திமுக தலைவரிடம் தாக்கல் செய்யப்படும் என ெநல்லையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு தெரிவித்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் செய்தி தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நேற்று நெல்லை வந்தது. நெல்லை சந்திப்பு ஆர்யாஸ் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வஹாப், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ.துரை ஆகியோர் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து மனுக்கள் அளித்தனர். நெல்லை எம்.பி ஞானதிரவியம், எம்எல்ஏக்கள் டிபிஎம் மைதீன்கான், ஏஎல்எஸ் லட்சுமணன், பூங்கோதை ஆகியோர் குழுவினரிடம் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மனுக்கள் பெறப்பட்டன. முதலில் நெல்லை கிழக்கு, மத்திய, தென்காசி தெற்கு, வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட வர்த்தகர்கள், விவசாயிகள், அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள், டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள், கோவில் அர்ச்சகர்கள், மீனவர் சங்கம், கட்டிடத் தொழிலாளர்கள், மருத்துவர்கள், கட்டுநர்கள், சிறுபான்மை பிரிவினர், அமைப்புகள், சிறு, குறுந் தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,  மாநில வர்த்தகர் அணி இணைச் செயலாளர் கிரகாம்பெல், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, மாவட்ட அவைத் தலைவர் சுப.சீதாராமன், முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், மத்திய மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன்,

நெல்லை டவுன் கோபி என்ற நமச்சிவாயம்,  விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், கணேஷ்குமார் ஆதித்தன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர்கள் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், ஜோசப் பெல்சி, களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி. ராஜன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், வக்கீல் அணி துணை அமைப்பாளர்கள் செல்வசூடாமணி, தவசிராஜன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் எரிக் ஜூடு, மாநகர இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் எஸ்.வி. சுரேஷ், துணை அமைப்பாளர் வக்கீல் சங்கர், வக்கீல் கலைச்செல்வன், தகவல் தொழில்நுட்ப அணி நெல்லை தொகுதி ஒருங்கிணைப்பாளர் காசிமணி, எல்ஐசி பேச்சிமுத்து, மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சங்கர், கீழப்பாவூர் பேரூர் பொருளாளர் பொன்செல்வன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குழுவினரிடம் கோரிக்கைகளை தெரிவித்தனர். பின்னர் டிஆர் பாலு நிருபர்களிடம் கூறுகையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கருத்துக்களை கேட்டு வருகிறோம். இன்னும் சில மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதன் பிறகு எங்களது அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்வோம். அவர் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் விசயங்கள் குறித்து இறுதி முடிவு செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடங்குளம் வழக்கு ரத்து செய்ய வேண்டுகோள்
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் நாட்டுப்படகு மீனவர் கூட்டமைப்பு சார்பில் நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை போராட்டத்தின் போது மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நெல்லை மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் இல்லை. எனவே திமுக ஆட்சி அமைந்ததும் புதிய துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். மறைந்த பேராசிரியர் தொ.ப. பெயரில் நெல்லை பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையும், பண்பாட்டு ஆய்வு நூலகமும் அமைக்க வேண்டும், மருத்துவர் சமுதாயத்திற்கு மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் 5 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என டீம் அசோசியேசன் சார்பிலும், பேட்டையில் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும், மானூரை மையமாக கொண்டு அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும். கோரையார் திட்டத்தின் மூலம் அணை கட்டி தாமிரபரணி தண்ணீர் மானூர் குளம் வந்து பள்ளமடை, கங்கைகொண்டான், சீவலப்பேரி வழியாக மீண்டும் தாமிரபரணி ஆற்றுக்கு செல்ல திட்டம் செயல்படுத்த வேண்டும் என மானூர் பெரிய குளம் பாசன நில விவசாயிகள் நலச் சங்க தலைவர் முகம்மது இப்ராஹிம் மற்றும் விவசாயிகள் சார்பிலும்,  தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் சார்பில், பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி தேவேந்திரகுல வேளாளர் உட்பிரிவுகளை இணைத்து அரசாணை வெளியிட பரிந்துரை செய்ய வேண்டும்    என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags : DMK ,districts ,tour ,
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை