×

வழக்கறிஞர்கள் தொடர்பான பிரச்னை விசாரணை நடத்த இரு நபர் குழு: தமிழ்நாடு பார்கவுன்சில் அறிவிப்பு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் காரில் திரும்பியபோது தமிழ்நாடு பார்கவுன்சில் அருகே வழக்கறிஞர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டார். இதையடுத்து, இரு தரப்பினரும் பரஸ்பரம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், இந்த பிரச்னை குறித்து விசாரிப்பதற்காக தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர்கள் ஆர்.அருணாச்சலம், டி.சரவணன் ஆகியோர் அடங்கிய இரு நபர் குழுவை அமைத்து தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Tamil Nadu Bar Council ,Chennai ,Viduthalai Siruthaigal Party ,Thirumavalavan ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...