×

புயல், மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச. 29: நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிவர் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் உரிய நிவாரணம் வழங்கக்கோரி வழங்க வேண்டும், கன மழையால் சேதமடைந்த அரசு தொகுப்பு வீடுகள், காலனி வீடுகளை புதிதாக கட்டி தர வேண்டும், சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும், கனமழையால் பகுதியாக சேதமடைந்த அனைத்து வகையான வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை கணக்கிட்டு வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத்தை காலதாமதமின்றி வழங்க வேண் டும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்ட திருத்தங்களை உடன் திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டூர், மன்னார்குடி ஒன்றிய, நகர குழுக்கள் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரராஜா தலைமையில் மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் மாவட்ட செயலாளர் நாகராஜன், கோட்டூர் ஒன்றிய செயலாளர் சண்முகவேல், மாவட்டக்குழு சந்திரா, ஒன்றி யக்குழு நிர்வாகிகள் பேசினர். பின்னர், கோரிக்கைகளை அடங் கிய மனுக்களை மன்னார்குடி தாசில்தார் தெய்வநாயகியிடம் வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை உடன் திரும்ப பெற வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : demonstration ,Marxist ,storm ,victims ,
× RELATED பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து...