ஸ்டிக்கர் ஒட்ட ஏஜென்சியா? ஆர்டிஓ அலுவலகம் முன் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, டிச.29: மோட்டார் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட தனியார் ஏஜென்சியை அனுமதித்ததை கண்டித்து சிஐடியூ சங்கத்தினர் ஆர்டிஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மோட்டார் வாகனங்களுக்கு ஒலி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அரசு நிர்ணயித்ததைவிட தனியார் ஏஜென்சிகளை அனுமதிக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) சார்பில் நேற்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் முகமதலிஜின்னா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்

மோட்டார் வாகனங்களுக்கு ஒலி பிரதிபளிப்பான் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக வசூல் செய்ய தனியார் ஏஜென்சிகளை அனுமதிக்கக்கூடாது. மோட்டார் வாகன திருத்த சட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும். இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்துசெய்ய வேண்டும். உதிரி பாகங்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories:

>