புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, டிச.29: புதுக்கோட்டையில் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொமுச பேரவை பொதுச்செயலாளர் எம்பி சண்முகம் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து திமுக தலைவர் ஸ்டாலினை தமிழகத்தின் முதல்வராக்க பாடுபட வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன், சொத்துபாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>