×

புதுகையில் பரபரப்பு புயல், மழையால் நோய்தாக்கிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

புதுக்கோட்டை, டிச.29: புதுக்கோட்டை அருகே புரவி புயலால் பெய்த தொடர் மழை காரணமாக 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களில் கழுத்துக்குலை நோய் மற்றும் இலைகுலை நோய் தாக்கி பயிர்கள் அனைத்தும் சேதம், வேளாண் துறையினர் பரிந்துரைத்த பூச்சி மருந்துகளும் பலன் அளிக்காததால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவி வழங்கி வாழ்வாதாரத்தை காக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட புதுநிலைவயல், நல்லம்பாள் சமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800க்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயிரிடப்பட்ட சுமார் 500 ஹெக்டேர் நெல்பயிர்கள் புரவி புயல் மற்றும் தொடர் மழை காரணமாக நெற்பயிரில் கழுத்துக்குலை நோய், இலைக்குலை நோய் தாக்குதல் ஏற்பட்டு நெற் பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நோயை கட்டுப்படுத்த வேளாண்துறையினர் பரிந்துரை செய்த பூச்சி மருந்துகளை அடித்தும் எவ்வித பலனும் இல்லை என்றும், இதனால் விவசாயிகளுக்கு கடும் மன உளைச்சலும் பெரும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்றும். இதனால் அந்த பகுதி விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டு தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும், இதற்கு என்ன செய்வதென்றே புரியாமல் விவசாயிகள் விழி பிதுங்கி உள்ளதாகவும் இதற்கு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இயற்கை பாதிப்பால் ஏற்பட்ட குலை நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு தவிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரண உதவி செய்து தங்களது வாழ்வாதாரத்தையும் எதிர்கால விவசாயத்தையும் காக்க வேண்டும் என்று கூறி மனு கொடுக்க விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த புகார் மனு பெட்டியில் மனுவை போட்டு விட்டுச் சென்றனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...