கலெக்டர் அலுவலகத்தில் மனு புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, டிச.29: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர் எண்ணிக்கை 11,383 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தோரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 11,177 ஆக உயர்ந்துள்ளது. புதிய உயிரிழப்பு இல்லை. இதனால், மாவட்டத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 155 ஆக தொடர்கிறது. இந்த நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 51 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>