அரியலூர் மாவட்டத்தில்

அரியலூர், டிச.29: பிரதோஷத்தை முன்னிட்டு மாலை கோமாதா பூஜையுடன் துவங்கி, மூலவர் முன்புள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காசிவிஸ்வநாதர் பல்வேறு மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். 2 இதேபோல் செந்துறை சிவதாண்டேஸ்வரர், கீழப்பழுவூர் ஆலந்துறையார், பெரியமறை வேதபுரீஸ்வரர், காமரசவல்லி கார்கோடேஸ்வரர், திருமானூர் கைலாசநாதர், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர், குழுமூர் ஜெயபுரீஸ்வரர், சென்னிவனம் தீர்க்கபுரீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர், நாகல்குழி காசிவிசுவநாதர், சொக்கநாதபுரம் சொக்கநாதர், பழமலைநாதபுரம் பழமலைநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>